சுடச்சுட

  

  பொதுத் தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தேனியில் புதன்கிழமை தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆர். அம்மையப்பன் தலைமை வகித்தார். மண்டலச் செயலர் வீரசத்திய ராமசாமி, மாநில மகளிரணிச் செயலர் கே. முத்துக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை சோதனையிட்டு நேரத்தை வீணடிக்கும் பறக்கும் படை குழு மற்றும் மாணவர்கள் காப்பியடிக்கும் செயலுக்கு தேர்வறை கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோரை கண்டித்தும், தேர்வுப் பணிக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai