சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் 82 சதவீத குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறக்கின்றன: ஆட்சியர்

    By கம்பம்,  |   Published on : 02nd April 2015 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் 82 சதவீத குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறப்பதாக, ஆட்சியர் ந.வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

    கம்பம் குலாளர் திருமண மண்டபத்தில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

    இம்முகாமை ஆய்வு செய்த பின் ஆட்சியர் ந.வெங்கடாசலம் கூறியது: தேனி மாவட்டத்தில், 82 சதவீதம் குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்றன. அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ், காப்பீட்டு அட்டை பெறாவதர்கள் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் காப்பீட்டு அனுமதி பெற்று உடனடியாக பயன்பெறலாம்.

    காப்பீடு தொடர்பாக தகவல், பெற ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடமோ அல்லது ஆட்சியரிடமோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இம்மருத்துவ முகாமில் இதயம் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன, என்றார்.

    பேட்டியின்போது, இணைஇயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) ஜானகி, கம்பம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் தங்கமுருகன், அரசு பொதுமருத்துமனை நிலைய அலுவலர் சையது சுல்த்தான் இப்ராஹிம், மருத்துவர் தியாகராஜன், நகராட்சி ஆணையாளர் சந்திரா உள்பட மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai