சுடச்சுட

    

    தேனியில் புதன்கிழமை நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியவரை போலீஸார் கைது செய்தனர்.

    தேனி அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த செவலமுத்து மகன் சத்திவேலு(33). இவர் மீது அடிதடி பிரச்னை தொடர்பான வழக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில்நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால், நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் அடிப்படையில், சக்திவேலுவை பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்து நீதிமன்ற உத்தரவில் பெரியகுளம் சப்-ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து, பெரியகுளம் சப்-ஜெயிலில் இருந்து புதன்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட சக்திவேலு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடி விட்டார்.

    இது குறித்து மாவட்ட காவல் துறை நிர்வாகம் மற்றும் தென்கரை காவல் நிலையத்துக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய சக்திவேலுவை புதன்கிழமை மாலை தேனி சடையால் முனீஸ்வரர் கோயில் அருகே பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai