சுடச்சுட

  

  போடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக, நகர்மன்றத் தலைவர் வி.ஆர்.பழனிராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

  போடி நகர்மன்ற கூட்டம், நகர்மன்ற தலைவர் வி.ஆர்.பழனிராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையாளர் மு.ஜோதிக்குமார், நகர்மன்றத் துணைத்தலைவர் ஜி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் நடந்த முக்கிய விவாதங்கள் வருமாறு:

  உறுப்பினர் ராமர்: நகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது துப்புரவு பணியாளர்களை நியமிக்க முன்னுரிமை தரவேண்டும். 21-ஆவது வார்டில் சாலை சீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டும், பாதாள சாக்கடை அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும், என்றார்.

  தலைவர்: போடி நகரில் விரைவில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்க உள்ளது, அதற்கான டெண்டர் விடப்பட்டு பணி ஆணையும் வழங்கப்பட உள்ளது,என்றார்.

  உறுப்பினர் ரஞ்சித்குமார்: தனது வார்டில் வெறிநாய் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

  உறுப்பினர் சிங்கராஜ்: சாலைகளில் பொதுமக்களுக்கு தொல்லையாக நடமாடும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

  உறுப்பினர் அழகர்: போடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 50 அடிச் சாலைகள் 10 அடியாக குறுகியுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை மீட்க வேண்டும், என்றார்.

  ஆணையாளர்: ஆக்கிரமிப்பாளர்களுக்கு விரைவில் எச்சரிக்கை ஆணை வழங்கி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,என்றார்,

  உறுப்பினர் ஜெயராம்பாண்டியன்: கோடை காலம் தொடங்கிவிட்டதால் போடியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை,என்றார்.

  உறுப்பினர் மகேந்திரன்: மயானத்தில் இறுதி சடங்கு நடத்த தனி கட்டடம் ஒதுக்க வேண்டும்,என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai