சுடச்சுட

  

  மகாவீரர் ஜயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை அரசு மதுக்கடை மற்றும் தனியார் மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, தேனி மாவட்டம் முழுவதும் போலீஸார் நடத்திய சோதனையில், மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 410 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  மதுபாட்டில் விற்ற மூவர் மீது வழக்கு: மகாவீரர் ஜயந்தியை முன்னிட்டு, வியாழக்கிழமை உத்தமபாளையம் அடுத்த அம்மாபட்டியைச் சேர்ந்த மயில் (65), உத்தமபாளையம் டாக்ஸி நிலையத்தில் மது விற்பனை செய்த சுரேஷ் (46) ஆகியோர் மீது, உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதேபோன்று மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சின்னமனூர் முத்துராம் நகரைச் சேர்ந்த கருப்பையா (60) மீது, சின்னமனூர் போலீஸாரும் வழக்குப் பதிந்துள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai