சுடச்சுட

    

    ரூ.3.69 கோடியில் விடுதிகள், வனத்துறை கட்டடங்கள் திறப்பு

    By ஆண்டிபட்டி  |   Published on : 03rd April 2015 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் ரூ. 3.69 கோடி மதிப்புள்ள விடுதிகள் மற்றும் வனத்துறைக் கட்டடங்களை, மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

    ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதி, ஆண்டிபட்டியில் ரூ. 75 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதி, எஸ்.எஸ். புரத்தில் ரூ. 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர்கள் விடுதி, திருமலாபுரத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ரூ.1.28 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர்கள் விடுதி, கண்டமனூரில் ரூ. 66.6 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி மற்றும் வைகை அணை வனவியல் கல்லூரி வளாகத்தில் ரூ. 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புவிசார் அறிவியல் தரவு மைய கட்டடம் ஆகியவற்றை, தேனி மாவட்ட ஆட்சியர் நா. வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

    இவ்விழாவில், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். பார்த்திபன், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தங்க. தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜானகி, ஆண்டிபட்டி வட்டாட்சியர் இளங்கோவன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ். மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதமணி மற்றும் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai