சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் ரூ.70 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணி

    By ஆண்டிபட்டி  |   Published on : 04th April 2015 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டியில் தொலைபேசி நிலையம் அருகே 70 லட்சம் செலவில் பாலம் மற்றும் சாலை உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் தொலைபேசி நிலையம் உள்ளது. இதனருகே மழைக் காலங்களில் சாக்கடையுடன் கலந்து தண்ணீர் குளம்போல் தேங்கிவிடுகிறது. இதனால், இப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து, தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் திட்டம் தயாரித்து, டெண்டர் விடப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தொலைபேசி நிலையம் எதிரில் 2.6 மீட்டர் அகலத்தில் 1 மீட்டர் உயரத்தில் பாலமும், மேலும் 150 மீட்டர் தொலைவுக்கு சாலையை உயர்த்தி இருபுறம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இது குறித்து, இப்பகுதியினர் கூறுகையில், மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இது குறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பது ஆறுதல் தருகிறது என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai