சுடச்சுட

    

    காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்: 3 போலீஸார் பணியிடை நீக்கம்

    By தேனி,  |   Published on : 04th April 2015 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம், தென்கரை காவல் நிலையத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, 3 போலீஸார் வெள்ளிக்கிழமை தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    பெரியகுளம், தென்கரை காவல் நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் சந்திரசேகர் இறந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பெரியகுளத்தில் மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், காவல் நிலையத்தில் சந்திரசேகரன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தென்கரை காவல் நிலையத்தில் அப்போது தலைமை காவலராக பணியாற்றிய மனோகரன், காவலர்களாக பணியாற்றிய பாண்டி, காமராஜ் ஆகியோரை தாற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் உத்தரவிட்டார்.

    தற்போது மனோகரன் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும், பாண்டி, காமராஜ் ஆகியோர் பெரியகுளம் காவல் நிலையத்தில் காவலர்களாகவும் பணியாற்றி வந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai