சுடச்சுட

    

    தேவாரத்தில் ரூ.1.91 கோடி விலையில்லா பொருள்கள் வழங்கல்

    By போடி,  |   Published on : 04th April 2015 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம், போடி அருகே தேவாரம் பேரூராட்சியில் ரூ. 1.91 கோடி மதிப்பிலான கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி உள்ளிட்ட விலையில்லா பொருள்களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

    தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். பார்த்திபன் முன்னிலை வகித்தார்.

    இதில், தேவாரம் பேரூராட்சியைச் சேர்ந்த 5,064 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1 கோடியே 91 லட்சம் மதிப்பிலான விலையில்லா பொருள்களை ஆட்சியர் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சுப்பு வரவேற்றார்.

    மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ். மகாலிங்கம், நகர்மன்றத் தலைவர்கள் கம்பம் சிவக்குமார், தேனி முருகேசன், பேரூராட்சித் தலைவர் சீனிவாசன் மற்றும் உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள், வருவாய்த் துறையினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    தனித் துணை ஆட்சியர் (பொறுப்பு) இளங்கோவன் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai