சுடச்சுட

    

    வாழையாத்துப்பட்டி, திருமலாபுரத்தில் "அம்மா' சிறப்பு மருத்துவ முகாம்

    By ஆண்டிபட்டி  |   Published on : 04th April 2015 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அருகே வாழையாத்துப்பட்டி மற்றும் ஆண்டிபட்டி அருகேயுள்ள திருமலாபுரம் ஆகிய கிராமங்களில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

    இது குறித்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.எம். ராஜா முத்தையா தெரிவித்தது: ஏப்ரல் 2 ஆம் தேதி வாழையாத்துப்பட்டி கள்ளர் பள்ளியிலும், ஏப்ரல் 3 ஆம் தேதி திருமலாபுரத்தில் உள்ள மக்கள் மன்றத்திலும் அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம், காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணிக்கு முடிவடைகிறது.

    முகாமில், அனைத்து சிறப்பு மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொள்கின்றனர். இதில், இப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai