Enable Javscript for better performance
கடமலைக்குண்டில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    கடமலைக்குண்டில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்

    By ஆண்டிபட்டி,  |   Published on : 05th April 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு ஊராட்சியில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் 6617 பயனாளிகளுக்கு, ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்களை ஆட்சியர் வழங்கி பேசியது:

    விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 நான்காம் கட்டமாக 91,208 பயனாளிகளுக்கு ரூ.34,31,24,496 மதிப்பிலான விலையில்லா மிக்ஸி,கிரைண்டர்கள் வழங்கப்பட உள்ளது.

    ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக 10, பிளஸ்2 படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000 நிதியுதவியும், 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 நிதியுதவியும், 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், நோட்டு,புத்தகங்கள், வடிவியல் உபகரணங்கள், பேருந்து இலவச பயண அட்டை, விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியின் போது பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியிர் ஜானகி, தேனி மக்களை தொகுதி உறுப்பினர் ஆர்.பார்த்திபன், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன், மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.மகாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai