சுடச்சுட

  

  கோம்பை மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ: ஏராளமான மரங்கள் நாசம்

  By உத்தமபாளையம்,  |   Published on : 05th April 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   தேனி மாவட்டம் கோம்பை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சனிக்கிழமை பற்றிய தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர். கோம்பை - பண்ணைப்புரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இம்மலையில் அரிய வகை மூலிகைகள், மரங்கள், யானை, சிறுத்தை, காட்டுப் பன்றி போன்ற வன விலங்கினங்களும் அரிய வகை பறவைகளும் உள்ளன.

  இந்நிலையில் மலைப்பகுதியில் சனிக்கிழமை பற்றிய தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் இருந்த வனச்சோலைகள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகின.

  இதுகுறித்து வனத்துறையினர் கூறியது: சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோம்பை மலை உச்சியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வனவர், வனக்காவலர், தீ தடுப்பு வீரர்கள் என 10க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று தீயை அனைக்க போராடி வருவதாக தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai