சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்காததால், அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மாவட்டக் காவல் துறை நிர்வாகம் மூலம், மாவட்டத்தில் 385 ஊர்க்காவல் படை வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 308 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். காலிப் பணியிடங்களுக்கு சில நாள்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    நகர் பகுதிகளில் போக்குவரத்து கண்காணிப்புப் பணியிலும், கோயில் திருவிழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணியிலும் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தப் பணிக்கு, மதிப்பூதியமாக நாளொன்றுக்கு ரூ. 150 வழங்கப்படுகிறது. தேனி, பெரியகுளம், சின்னமனூர், கம்பம், போடி ஆகிய நகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக் கண்காணிப்புப் பணிக்கு போலீஸார் பற்றாக்குறையால், ஊர்க்காவல் படையினர் தினமும் பணியில் ஈடுபடுவது கட்டாயமாகியுள்ளது.

    இந்த நிலையில், ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மதிப்பூதியம் வழங்கப்படவில்லையாம். சராசரியாக மாதம் 15 நாள்கள் மட்டும் பணி வாய்ப்பு உள்ள நிலையில், தொடர்ந்து 3 மாதம் மதிப்பூதியம் வழங்காததால், அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஊர்க்காவல் படை வீரர்களுக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கு மதிப்பூதியம் வழங்க நிர்ணயிக்கப்பட்ட நிதி ரூ. 63 லட்சத்தில், ரூ. 42.5 லட்சம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளதால், மதிப்பூதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷிடம் கேட்டதற்கு, ஊர்க்காவல் படை வீரர்களுக்கு சில நாள்களுக்குள் நிதி ஒதுக்கீடு பெற்று, சம்பளம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai