சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரியை மாணவ, மாணவிகள் முற்றுகை

    By ஆண்டிபட்டி,  |   Published on : 05th April 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணலின் போது செலுத்தப்பட்ட முன்பணத்தை திருப்பித் தர வலியுறுத்தி மாணவ மாணவிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

    ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இறுதியாண்டு முடித்த 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறி அவர்களிடம் ரூ.12 ஆயிரம் முன்பணமாக பெற்றுக்கொண்டு, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவன பணிக்கு அனுப்பி வைத்தனராம். அங்கு அவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் 6 மாதமாக பயிற்சி உதவித்தொகை மற்றும் பணி ஆணையும் வழங்காமல் மாணவ, மாணவிகளை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி மாணவி, மாணவிகள் செலுத்திய தொகையை திருப்பித் தருவதாக கூறியதையடுத்து முற்றுகைப்போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai