சுடச்சுட

  

  போடி நகரில் மின் தடை செய்யப்படும் நேரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  தேனி செயற்பொறியாளர் க.உமாதேவி அறிவுறுத்தலின் பேரில் போடி உதவி செயற்பொறியாளர் எஸ்.முருகேஸ்பதி தெரிவித்துள்ளது:

  போடி உபகோட்டத்துக்குள்பட்ட நகராட்சி எல்லை பகுதிகளில் ஒழுங்குபடுத்துதல் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட மின் அபிவிருத்தி மற்றும் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் தளவாட சாமான்கள் பழையனவற்றை மாற்றி புதிதாக அமைக்க இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் கீழ்கண்ட தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். இந்த மின் தடை நேரங்களில் பொதுõமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:

  5.4.2015 - ஜ.கா.நி. பள்ளி, பெரியாண்டவர் கோவில் சுற்றியுள்ள பகுதிகள். 6.4.2015 மற்றும் 7.4.2015 நந்தவனம், சவுடம்மன் கோவில், பரமசிவன் கோவில் தெரு, விஸ்வகர்மா மண்டபம் சுற்றியுள்ள பகுதிகள். 8.4.2015 மற்றும் 9.4.2015 - ஜ.கா.நி. மெட்ரிக் பள்ளி, குப்பிநாயக்கன்பட்டி சுற்றியுள்ள பகுதிகள். 10.4.2015 ஜமீன்தோப்பு தெரு, போஜன் பார்க் சுற்றியுள்ள பகுதிகள்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai