Enable Javscript for better performance
மறு வாழ்வு நிதியில் கறவை மாடு வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 9 பேரின் குடும்பத்துக்கு வருவாய்த்துறை சார்பில் மறு வாழ்வு நிதியில் இருந்து கறவை மாடுகள் வழங்கப்பட்டன.

    உ.அம்மாபட்டி, குச்சனூர், கோம்பை, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, தொப்பையாபுரம், தர்மாபுரி, தப்புக்குண்டு, மணலாறு ஆகிய கிராமங்களில் வசிக்கும் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு மறு வாழ்வு நிதியில் இருந்து கறவை மாடுகள் வாங்கி வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட கலால் துறை உதவி இயக்குநர் அலெக்ஸாண்டர் ராய், கோட்ட அலுவலர் குமார், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர்கள் முருகேசன், ஜெகதீசன், கம்பம் நகர்மன்றத் தலைவர் டி.சிவக்குமார், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் உத்தமபாளையம் தீபாவளிராஜ், கம்பம் தங்க.முருகன், க.மயிலை எம்.பி.ராமர், தேனி அம்சகோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai