சுடச்சுட

    

    தேனியில் ஞாயிற்றுக்கிழமை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் எம்.குருசாமி தலைமை வகித்தார். பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் டி.வெங்கடேசன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலர் சி.முருகன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் கே.ஆர்.கணேசன் ஆகியோர் பேசினர்.

    இத் துறை ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்து சலுகைகள் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி பதிவேடு வழங்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பண்டிகை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

    புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் சி.முருகன், செயலர் டி.ஜெயபாண்டி, பொருளாளர் ஜி.சுப்ரமணி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai