Enable Javscript for better performance
கம்பம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

    தேனி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் கம்பம்-உத்தமபாளையம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்லிலிருந்து கம்பம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 340 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லாரி ஓட்டுநர் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த மொக்கத்துரை மகன் விஜயகுமாரை போலீஸார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கம்பத்தைச் சேர்ந்த பார்த்திபன் இந்த கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai