சுடச்சுட

    

    சாக்குலத்து மெட்டு மலைச்சாலை ஆய்வு பணி: வனத்துறை அனுமதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

    By போடி  |   Published on : 06th April 2015 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாக்குலத்து மெட்டு மலைச்சாலை அமைப்பதற்கான முதல் கட்ட பணியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு நடத்துவதற்கு வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது தேவாரம் அருகே உள்ள சாக்குலத்துமெட்டு மலைச்சாலை. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட சுமார் 50 கிராம மக்கள் பயன்பெறும் இச்சாலை தமிழகம்-கேரளத்தை இணைப்பதுடன் சுற்றுலா வளர்ச்சியிலும் முக்கிய பங்குபெறும் சாலையாகும்.

    இச்சாலையை அமைக்க கடந்த சுமார் 25 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 1981-இல் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்திலும் இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்கின்றனர்.

    கடந்த மார்ச் 20-ஆம் தேதியும் இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியதன் பேரில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலமும், மாவட்ட திட்ட இயக்குநரும் உத்தரவிட்டனர். இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைப்பதற்கான அனுமதி கேட்டு வனத்துறைக்கு பலமுறை கடிதம் எழுதியும் சென்னை, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) அலுவலகத்திலிருந்து உரிய அனுமதி கடிதம் வரவில்லை.

    தேனி மாவட்ட வனத்துறை அலுவலகமும் பல நினைவூட்டல் கடிதங்கள் எழுதியும் பதில் இல்லை. இதனால் சாக்குலத்து மலைச்சாலை அமைக்கும் திட்டம் முடங்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே சாக்குலத்து மெட்டு மலைச்சாலை அமைக்கும் பணியின் முதல் கட்டமாக சாலை அமைக்கும் ஆய்வு பணிக்கு வனத்துறை உரிய அனுமதி வழங்க வேண்டும் என தேவாரம் பகுதி விவசாயிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai