சுடச்சுட

    

    பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிக்கு உள்பட்ட தேக்கடி வனப்பகுதியில் கிடந்த ஆண் புலியின் சடலத்தை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

    தமிழக- கேரள எல்லையில் கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள தேக்கடி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, அஞ்சுருளி வலியமுனி

    என்ற இடத்திலுள்ள நீர்த்தேக்கத்தின் கரையில் இறந்தகிடந்த ஆண் புலியின் சடலத்தை கண்டனர்.

    இதையடுத்து, தேக்கடி ரேஞ்சர் சஜீவன் தலைமையில், சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர், புலியின் சடலத்தை குமுளியிலுள்ள ராஜீவ்காந்தி வனவிலங்கு ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    திங்கள்கிழமை, விடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், வனத்துறையினர் கூறுகையில், புலி பத்து வயதுடைய ஆண் புலியாகும். இறந்த புலியின் வாயில் முள்ளம்பன்றியின் முள் மாட்டிக்கொண்ட நிலையில் உள்ளது.

    இதனால் உணவு ஏதும் உட்கொள்ள முடியாமல் புலி இறந்திருக்கலாம். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே முழு விபரம் தெரியவரும் என்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai