சுடச்சுட

  

  தேனியில் சனிக்கிழமை இரவு சமூக மாற்றம் மற்றும் மறுவாழ்வு மையம்(சாரா) சார்பில் திருநங்கைகள் கலை விழா நடைபெற்றது.

  தேனி என்.ஆர்.டி. மக்கள் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம் இயக்குநர் எஸ்.எம்.சைமன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். சாரா மையத் தலைவர் அழகுராஜா வரவேற்றார். இதில், கலைநிகழ்ச்சி, திருநங்கைகள் பங்கேற்ற அழகிப் போட்டி மற்றும் மூத்த திருநங்கைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  திருநங்கைகள் மற்றும் கலைக் குழுவினர் பங்கேற்ற தப்பாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற பாட்டு, பரத நாட்டியம், பாம்பு நடனம், தற்காப்புக் கலை மற்றும் சிறுவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. திருநங்கைகளுக்கு இடையே நடைபெற்ற மிஸ் தேனி அழகிப் போட்டியில் தேனியைச் சேர்ந்த பானு, ஸ்டெல்லா, சிவசங்கரி, தர்ஷினி ஆகியோர் பட்டம் வென்றனர்.

  மூத்த திருநங்கைகள் மற்றும் திருநங்கைகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. சாரா மைய செயலர் பி.சத்தியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பொருளாளர் பாரதி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai