சுடச்சுட

    

    கூடலூரில் முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டு மணி நேர தேடலுக்கு பின்னர் உடல் மீட்கப்பட்டது.

    கூடலூர் வெட்டுச்சாவடி கவுடர் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் துர்கேஷ்(10). இவர் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்களுடன் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் குளித்துள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக துர்கேஷ் தண்ணீர் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, கம்பம் தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேர தேடுதலின்போது உடல் கிடைக்கவில்லை, பின்னர், பொதுமக்கள், உறவினர்கள் சிலர் தேடியபோது, மாணவன் உடல் மீட்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கூடலூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai