சுடச்சுட

    

    போடி வனப்பகுதியில் காயங்களுடன் உயிருக்கு போராடிய அடையாளம் தெரியாத முதியவர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சேர்த்தபின் உயிரிழந்தார்.

    போடி வனத்துறைக்கு சொந்தமான குரங்கனி கிராமத்திற்கு மேல் பகுதியில் சாம்பலாறு வனப்பகுதி உள்ளது. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதி. யாரும் சென்று வரமுடியாது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இப்பகுதியிலிருந்து முனகல் சத்தம் வருவதாக இப்பகுதியில் வசிக்கும் பளியர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர் சிலர் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போடி வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் வனத்துறையினர் இப்பகுதியில் தேடிப் பார்த்ததில் வனப்பகுதியில் சுமார் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிந்தது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட முதியவர் மருத்துவமனையில் இறந்து போனார்.

    முதியவரை யாராவது தாக்கி வனப்பகுதியில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போடி குரங்கனி காவல் நிலைய ஆய்வாளர் பாலகுரு, சார்பு ஆய்வாளர் போஜூ மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இறந்து போன முதியவர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai