சுடச்சுட

  

  பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகிய பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

  மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம் விழாவிற்கு தலைமை வகித்தார். தேனி தொகுதி எம்.பி ஆர்.பார்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினர் லாசர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம்.செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ஜானகி வரவேற்றார்.

  விழாவில் தேவதானப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த 5844 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பிலான விலையில்லா பொருள்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

  மாவட்ட அதிமுக செயலர் டி.சிவக்குமார், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மேல்மங்கலம் ஆர்.லட்சுமணன், அழகர்சாமிபுரம் எம்.சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் கே.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஜெயமங்கலம் கே.கண்ணன், வட்டாட்சியர் ஆர்.ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் கே.ஆர்த்தி, துணை வட்டாட்சியர் (சிறப்பு திட்டங்கள்) காதர் ஷெரீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai