சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் அம்மா திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமினை திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் பொதுமருத்துவத்துறை, பொது அறுவை சிகிச்சை துறை, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல், மகப்பேறு, குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.எம்.ராஜா முத்தையா மேற்பார்வையில் நிலை மருத்துவ அலுவலர் கணேஷ் பாபு, துணை நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.ராதா ஆகியோர் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai