சுடச்சுட

    

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது

    By தேனி,  |   Published on : 07th April 2015 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

    ஹைவேவிஸ் அருகே மேல்மணலாரில் வசித்து வரும் விவசாயத் தொழிலாளி பிச்சைக்கனி. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு மனைவி மற்றும் மகனுடன் வந்திருந்தார். இந்நிலையில் பிச்சைக்கனி திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பிச்சைக்கனியை தடுத்து நிறுத்தி, அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் கொடுப்பதற்காக பிச்சைக்கனி வைத்திருந்த மனுவில், ஆதி திராவிடர் நலத் துறை மூலம் அரசு தனது பெயரிலும், மாற்றுத் திறனாளியான தனது மகன் சுரேஷ்(24) பெயரிலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தை, அரண்மனைப்புதூரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும், அவரிடமிருந்து நிலத்தை மீட்க முடியாமல் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக பிச்சைக்கனி மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai