Enable Javscript for better performance
ஆதார் புகைப்படம் எடுக்க தாமதம்: பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் புகைப்படம் எடுக்க தாமதம்: பொதுமக்கள் சாலை மறியல்

    By ஆண்டிபட்டி  |   Published on : 07th April 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை ஆதார் புகைப்படம் எடுக்க பணியாளர்கள் வராததைக் கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காக திங்கள்கிழமை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் காத்திருந்தனர். ஆனால் காலை 11 மணிக்கு மேலாகியும் புகைப்படம் எடுக்க பணியாளர்கள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆண்டிபட்டி - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களின் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. மறியலால் ஆண்டிபட்டி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai