Enable Javscript for better performance
இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

    By தேனி,  |   Published on : 07th April 2015 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் அரசு இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆண்டிபட்டி வட்டாரம் தேக்கம்பட்டி வருவாய் கிராமத்தில் அரசு அனாதீனம் என்ற வகைப்பாட்டில் உள்ள நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மக்கள் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். மனுதாரர்கள் சிலரிடம் விசாரித்ததில், சில தனி நபர்களின் தூண்டுதலின் பேரிலும் தவறான வழிகாட்டுதலிலும் இந்த கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வருவதும், இதற்காக மனுதாரர்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

    அரசு திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றுத் தருவதாக இடைத்தரர்கள் அளிக்கும் போலி வாக்குறுதிகளை நம்பி பொதுமக்கள் மனு அளித்தும், இடைதரகர்களுக்கு பணம் கொடுத்தும் ஏமாற வேண்டும். அரசு இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் இடைகத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai