சுடச்சுட

  

  கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த கொலையில், தலைமறைவான இருவரை திங்கள்கிழமை கம்பம் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.

  கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கோயில் திருவிழா கலைநிகழ்ச்சியில் இருதரப்பினரிடையே நடந்த மோதலில், நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன்(21) உயிரிழந்தார்.

  இதில், கருநாக்கமுத்தன் பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித்(21), ஈஸ்வரன் மகன் விஜயன்(19), முருகன் மகன் சூர்யபிரகாஷ்(21),கலையரசன் மகன் விஜித்(18),ஈஸ்வரன் மகன் சரவணக்குமார்(20) ஆகிய 5 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவான ஈஸ்வரன் மகன் சிவனேசன்(21),அய்யாவு மகன் மனோஜ்குமார்(19) ஆகிய இரண்டு பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai