சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில், ஏப்ரல் 10 ஆம் தேதி அம்மா திட்டத்தின் கீழ் 3 இடங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெரியகுளம் வடகரை, ஆண்டிபட்டி, மேலக்கூடலூர் ஆகிய இடங்களில் வரும் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு, வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்டத்தின் கீழ் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு, பட்டா மாறுதல், அரசு நலத்திட்ட உதவி, வருவாய்த் துறை சான்றிதழ், உழவர் பாதுகாப்பு அட்டை, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை திருத்தப் பதிவு, கிராமத்தில் உள்ள பொதுவான பிரச்னை ஆகியன குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai