சுடச்சுட

    

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏப்.16-ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு துறைகளில் முழு நேரம் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஏப். 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆண் மற்றும் பெண்களுக்கு தனித் தனி பிரிவுகளில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கையுந்துபந்து ஆகிய குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். ஆண்களுக்கு மட்டும் கால்பந்து போட்டி நடைபெறும். சீருடை பணியாளர்கள், தன்னாட்சி மற்றும் பொதுத்துறை பணியாளர்கள், விளையாட்டு அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

    போட்டியில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தாங்கள் பணியாற்றும் துறை அலுவலர்களிடமிருந்து சான்று பெற்று வர வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai