Enable Javscript for better performance
கண்ணகி கோயில் விழா: தேக்கடியில் இன்று ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கண்ணகி கோயில் விழா: தேக்கடியில் இன்று ஆலோசனைக் கூட்டம்

    By கம்பம்  |   Published on : 07th April 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடுகள் தொடர்பான கேரள-தமிழக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் செவ்வாய்க்கிழமை நடக்க உள்ளது.

    தேனி மாவட்டம், கூடலூர் வனச்சரகம் பளியன்குடியிலிருந்து 6.6 கி.மீ தூரத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. கோயிலின் பெரும்பகுதி தமிழக எல்லையில் இருந்தாலும், வனப்பாதை கேரள பகுதியில் உள்ளது. இதனால், தமிழக-கேரள அரசுகளுக்கிடையே பிரச்னை நிலவி வந்தது.

    இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா குறித்து, தமிழக-கேரள அரசுகள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேவையான ஏற்பாடுகளைச் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த 1985 முதல் ஒவ்வொரு ஆண்டும், இருமாநில அரசு அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தேக்கடியிலுள்ள ராஜீவ்காந்தி நினைவு வனவிலங்கு ஆராய்ச்சி அரங்கத்தில் நடைபெறுகிறது.

    ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம், இடுக்கி மாவட்ட கலெக்டர் சசீதரன் தேனி, இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநர் சஞ்ஜீவன்குமார், மேகமலை வனஉயிரின சரணால காப்பாளர் சொர்ணப்பன், பீர்மேடு சட்டப்பேரவை உறுப்பினர் பிஜிமோள் மற்றும் இரு மாநில அதிகாரிகள், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai