Enable Javscript for better performance
குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

    By தேனி,  |   Published on : 07th April 2015 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அருகே பூதிப்புரத்தில் திங்கள்கிழமை குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், தேமுதிக கட்சி நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

    பூதிப்புரம் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் வீட்டு உபயோகத்திற்கு மாதம் ரூ.50-ல் இருந்து ரூ.100 ஆகவும், வணிக உபயோகத்துக்கு ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் இணைப்புக்கான வைப்புத் தொகை, வீட்டு வரி, காலியிடம் வரி ஆகியவையும் உயர்த்தப்பட்டுள்ளன.

    குடிநீர் கட்டண உயர்வு, வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பேரூராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் எஸ்.செல்லாண்டி, வட்டாரச் செயலர் டி.கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.நாகராஜன், திமுக செயலர் எஸ்.பால்பாண்டியன், காங்கிரஸ் தலைவர் வி.போஸ், தேமுதிக செயலர் வி.எஸ்.ராமு ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் கட்டண உயர்வு மற்றும் வரி உயர்வை வாபஸ் பெறக் கோரி பேரூராட்சி செயல் அலுவலர் ஹவுஸ் முகைதீனிடம் 248 பேர் தனித் தனியாக மனு அளித்தனர்.

    காமயகவுண்டன்பட்டி

    கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியிலும் குடிநீர் கட்டணம் உயர்த்தைப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டதுக்கு திமுக செயலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தேமுதிக செயலர் சின்ராஜ், பாமக செயலர் கணேசன், பாஜக தலைவர் சுருளிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய திமுக முன்னாள் செயலர் குரு.இளங்கோ, பாமக தொழிற்சங்க செயலர் சுதாகரன், பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலர் சங்கர் ஆகியோர் பேசினர்.

    கம்பம்

    கம்பம் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஎம் வட்டார செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் வெங்கடேசன் மற்றும் ஆண்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்பாட்டத்திற்கு பின்னர் மனுக்களை ஆணையர் சந்திராவிடம் கொடுக்க வந்த ஆண்களும் பெண்களும் நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து ஆணையாளரின் அறைமுன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சியை கண்டித்தும், ஆணையரை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai