சுடச்சுட

  

  சாலை உள் கட்டமைப்பை மேம்படுத்த காவல் துறை பரிந்துரை

  By தேனி  |   Published on : 07th April 2015 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்கு, சாலை உள் கட்டமைப்பை மேம்படுத்த மாவட்ட காவல் துறை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

  தேனி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு திண்டுக்கல்-குமுளி, மதுரை-கோட்டயம் நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை ஐயப்பன்கோயில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றனர். தேனியை மையமாக வைத்து சுமார் 50 கி.மீ.,சுற்றளவில் உள்ள மாவட்ட எல்லைக்குள் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

  மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களில் மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு விபத்துக்கான காரணத்தை வகைப்படுத்தி அறிக்கை தயாரித்துள்ளனர். இதில், பொறியியல் மற்றும் சாலை பாதுகாப்பு நடவடிக்கை குறைபாட்டால் அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் தலைமையில் சில நாள்களுக்கு முன் நடைபெற்ற மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  இதில், மாவட்ட காவல் துறை நிர்வாகத்தின் பரிந்துரையின்படி நகராட்சி எல்லைகளுக்கு உள்பட்ட நெடுஞ்சாலைகளை சீரமைக்கவும், நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகளை போக்குவரத்துக்கு இடையூறின்றி மேற்கொள்ளவும், நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் போதிய எண்ணிக்கையில் தெரு விளக்குகள் அமைக்கவும், நெடுஞ்சாலை இணைப்புச் சாலைகளில் வேகத் தடை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்கவும், குறுகலான சாலை திருப்பங்களை அகலப்படுத்தவும், தார் சாலையில் மேவியிருக்கும் மணல் குவியலை அகற்றவும், சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தி சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai