Enable Javscript for better performance
சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    By உத்தமபாளையம்  |   Published on : 07th April 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சின்னமனூரில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

    சின்னமனூர் நகராட்சி 28 வார்டுகளும், 50 ஆயிரம் மக்கள் தொகையும் கொண்டது. இதில் 27ஆவது வார்டில் பல தெருக்களுக்கு சாக்கடை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும் பாதாள சாக்கடைப் பணிகளும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நகராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், திங்கள்கிழமை காலை நூற்றுக்கணக்காண பெண்கள் ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆணையர் இல்லாத நிலையில் பொறியாளர் மணிமாறன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் அடுத்த, இரு தினங்களில் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படுவதாக உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai