சுடச்சுட

  

  தேனி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் பெண்களுக்கு தையல் மற்றும் எம்ப்ராய்டரி இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

  இது குறித்து கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் தீனதயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேனி வட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், ஏப்.6-ஆம் தேதி முதல் பெண்களுக்கு எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்பும், ஏப். 8-ஆம் தேதி தையல் பயிற்சி வகுப்பும் தொடங்குகிறது. 15 நாள்கள் வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும்.

  பயிற்சியின் போது மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். 8-ஆம் வகுப்புக்கு மேல் படித்த வேலையில்லாத பெண்கள் பயிற்சியில் சேரலாம். பயிற்சி குறித்த தகவல்களை பயிற்சி மைய அலுவலகர்கள் செல்லிடப் பேசி எண்: 99528 78418, 94427 58363-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai