சுடச்சுட

    

    கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் மனித வள மையம் சார்பில் அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    கம்மவார் சங்கத் தலைவர் கே.வி.ஆர்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கல்லூரி செயலர் பி.பொன்னுச்சாமி வரவேற்றார். பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ஜானகி முன்னிலை வகித்தார்.

    அரசு தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி கற்பூரசுந்தர பாண்டியன் பேசினார்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகிகள் கூறினர். கல்லூரி முதல்வர் டி.நாகரத்தினம் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai