Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேனி, போடி பகுதிகளில் அரசு அனுமதியின்றி டிராக்டர் மூலம் மணல் அள்ளிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     பூதிப்புரத்தைச் சேர்ந்தவர்கள் ராமசாமி மகன் மொக்கச்சாமி(40), செல்வம் மகன் மொக்கச்சாமி(23). இவர்கள் வலையபட்டி அருகே அரசுக்குச் சொந்தமான ஓடையில் இருந்து அனுமதியின்றி டிராக்டர் மூலம் மணல் அள்ளிச் சென்றதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போடி:  போடி கொட்டகுடி ஆற்றிலிருந்து டிராக்டரில் மணல் அள்ளி வருவதாக போடி டவுன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்  போடி குரங்கனி சாலையில் மாங்காய் சந்தை அருகே வேகமாக வந்த டிராக்டரை மறித்து பார்த்தபோது அதில் மணல் அள்ளி வந்தது தெரிந்தது.  இதையடுத்து  போடி குலசேகரபாண்டியன் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமியை (25) போலீஸார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய கண்ணனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai