Enable Javscript for better performance
ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை நெசவாளர்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை நெசவாளர்கள் முற்றுகை

    By ஆண்டிபட்டி  |   Published on : 08th April 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிறுத்திவைக்கப்பட்டுள்ள கூலியை உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை நெசவாளர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

    ஆண்டிபட்டி சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலியை உடனடியாக வழங்கவேண்டும், நெசவாளர்களுக்கு விலையில்லா சேலை திட்டத்தில் ஆண்டு முழுவதும் பணி வழங்கவேண்டும்.

     வாரம் ஒரு முறை கூலி வழங்கவேண்டும்.  60 வயது நிரம்பிய நெசவாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.2ஆயிரத்தை ரூ. 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

     பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் துணை வட்டாட்சியர் மணிமாறனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். 

     இதில் சிஐடியூ அமைப்பைச் சேர்ந்த தங்கவேல், ராமர், மாரிமுத்து மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai