சுடச்சுட

  

  உத்தமபாளையம் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

  By உத்தமபாளையம்  |   Published on : 08th April 2015 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியிலுள்ள கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

  மாவட்டத்திலுள்ள கால்வாய்கள், ஊருணிகள், குளங்கள் உள்ளிட்டவைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என, விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

  இதில், உத்தமபாளையம் முல்லைப் பெரியாறு பாசனத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 17 கால்வாய்களில் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதாகவும், இதனால் விவசாயத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் உரிய இடத்துக்குச் சென்று சேர்வதில்லை என்றும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

  இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் உத்தரவின்பேரில், உத்தமபாளையம் பொதுப்பணித் துறையினர் செவ்வாய்க்கிழமை முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  தற்போது, உத்தமபாளையம் நகர் பகுதியில் செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து, அனைத்து கால்வாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இருப்பதாக, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai