சுடச்சுட

  

  ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவரை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

  ஏத்தக்கோயில் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்க வில்லையாம். இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சியில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

   இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி டிஎஸ்பி குலாம், இன்ஸ்பெக்டர் நல்லு, வட்டாட்சியர் இளங்கோ மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததன் பேரில் முற்றுகையை விலக்கிக்கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai