சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டை போல கோடை மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

    மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்.6, 7 ஆகிய தேதிகளில் அதிக அளவில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்.5, 6, 9 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்தது. தொடர்ந்து மே 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கன மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறைந்தது. தற்போது, கடந்த ஆண்டை விட அதிகமாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கோடை மழையும் பொய்த்ததால் வெப்பம் தாளாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். தேனியில் பகலில் சாலை மற்றும் கடைத் தெருக்களில் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ளது. வெயில் அதிக அளவில் உள்ளதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

     வரும் மே.4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன், கடந்த ஆண்டைப் போல தற்போது கோடை மழை பெய்தால் வெயிலின் தாக்கம் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai