சுடச்சுட

  

  மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா: இரு சக்கர வாகனங்களில் செல்ல தடை

  By கம்பம்  |   Published on : 08th April 2015 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இருசக்கரவாகனங்கள், ஒலிபெருக்கிகளுக்கும் தடைவிதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

        மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தேக்கடியில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜே.மகேஷ், மேகமலை வனச்சரணாலயக் காப்பாளர் சொர்ணப்பன் உள்பட பல்வேறு துறை அலுவலர்களும், கேரளத்தின் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி.ரதீசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.வி.ஜோசப், பெரியாறு புலிகள் சரணாலயத்தின் துணை இயக்குநர் சஞ்ஜீவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

      ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: தமிழகத்திலிருந்து பூஜை பொருள்கள், அன்னதானம் உள்ளிட்டவைகள் கொண்டு செல்ல 6 டிராக்டர்கள் அனுமதிக்கப்படும். காலை 5 மணி முதல் நண்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும். கோயில் வளாகத்தில் மாலை 5 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    கோயில் வளாகத்தில் மொட்டை போடவும், பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது. 5 லிட்டர் மற்றும் அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட கேன்களில் மட்டும் தண்ணீர் கொண்டு செல்லலாம். இரு சக்கர வாகனங்கள், ஒலிபெருக்கிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.   சோதனைச்சாவடிகளில் இருமாநில போலீஸாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai