சுடச்சுட

  

  வரதட்சணைப் புகார்: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

  By உத்தமபாளையம்  |   Published on : 08th April 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கூடுதல் வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக, கணவர் உள்பட 4 பேர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  உத்தமபாளையம், இந்திரா நகரைச் சேர்ந்த ஆஸிபா (28). இவருக்கும், கம்பம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அகமது மீரான் (30) என்பவருக்கும் 2011 இல் திருமணம் நடந்துள்ளது. அப்போது, பெண் வீட்டார் சார்பில் 55 பவுன் நகைகள் போடப்பட்டுள்ளன.

  இந்நிலையில், மேலும் 15 பவுன் நகையை வாங்கி வரும்படி, கணவர் மற்றும் அவரது வீட்டார் ஆஸிபாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

  ஆனால் நகை கொடுக்காததால், ஆஸிபா மற்றும் அவரது பெண் குழந்தையும், 8 மாதத்துக்கு முன்பே வீட்டை விட்டு அனுப்பி விட்டனராம். அதன்பின்னர், தந்தை வீட்டில் இருந்து வந்த ஆஸிபா, கூடுதல் வரதட்சணைக் கேட்டு தன்னை துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்திவிட்டதாக, உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.

  புகாரின்பேரில், ஆஸிபாவின் கணவர் அகமது மீரான், மாமனார் அஜ்மல்கான் (60), மாமியார் சமீமாபானு (50) மற்றும் ஆயிசா சித்திகா (22) ஆகிய 4 பேர் மீது, ஆய்வாளர் கீதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai