சுடச்சுட

    

     பழனி கோயில் உண்டியல் எண்ணும் பணி: முதல் நாளில் ரூ.1.48 கோடி வரவு

    By பழனி  |   Published on : 09th April 2015 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் கடந்த 13 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை அவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், முதல் நாளில் ரூ.1.48 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

       இந்த உண்டியல்கள் மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. முதல் நாள் எண்ணிக்கையில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய ரொக்கப் பணம் ரூ.1 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரத்து 850 கிடைத்தது.

      மேலும், தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியாலான வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். இதில், தங்கம் 1,452 கிராமும், வெள்ளி 4,635 கிராமும் கிடைத்துள்ளன. வெளிநாட்டு கரன்சிகள் 103 கிடைத்துள்ளன.

       இவை தவிர, ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள்,  பரிவட்டங்கள், நவதானியங்கள், கைக் கடிகாரங்கள், முந்திரி, ஏலக்காய் மாலைகளையும் செலுத்தியிருந்தனர்.  உண்டியல் எண்ணும் பணியில், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், திருக்கோயில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.   இப்பணியின்போது, பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் உமா உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர். தொடர்ந்து வியாழக்கிழமையும் உண்டியல் எண்ணும் பணி நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai