சுடச்சுட

  

  சாலை விபத்து: ஒரே பைக்கில் வந்த 4 பேரில் ஒருவர் சாவு; 3 பேர் படுகாயம்

  By உத்தமபாளையம்  |   Published on : 09th April 2015 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், குச்சனூர் அருகே புலிக்குத்தியில் நடைபெற்ற திருவிழாவை பார்த்துவிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

     புலிக்குத்தியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதைக் காண்பதற்காக, அய்யம்பட்டியைச் சேர்ந்த பாண்டி கணேசன் (30), அருண்பாண்டி (19), ரகுமணி (24) மற்றும் மருதுபாண்டி ஆகிய 4 பேரும், இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளனர்.

     கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும், நள்ளிரவு மீண்டும் அதே வாகனத்தில் 4 பேரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, புலிக்குத்தி விலக்கில் இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம்  விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த 4 பேரையும்,  மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு பாண்டி கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai