சுடச்சுட

  

  நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள இடம் அருகே கருவேல மரங்களை ஏலம் விட மீண்டும் எதிர்ப்பு

  By போடி  |   Published on : 09th April 2015 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள இடம் அருகே வளர்ந்துள்ள கருவேல மரங்களை ஏலம் விட, கிராம மக்கள் புதன்கிழமை மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒப்பந்ததாரர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் ஏலத்தொகையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமையவுள்ள நிலையில், அதற்கான சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொட்டிப்புரம் கிராமத்திலிருந்து சாலை அமைக்கும் பகுதியில் சுமார் 450 சதுர மீட்டர் பரப்பளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களை அகற்றினால்தான் சாலை அமைக்க முடியும். எனவே, பொட்டிப்புரம் ஊராட்சிக்குச் சொந்தமான இப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை ஏலம் விட, சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஏற்கெனவே, கடந்த மார்ச் 18 ஆம் தேதி ஏலம் விட முயன்றபோது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒப்பந்ததாரர்கள் திரும்பிச் சென்றனர். புதன்கிழமை மீண்டும் ஏலம் விட அறிவிக்கப்பட்டு, அதற்கான நோட்டீஸ் கிராம மக்களிடம் வழங்கப்பட்டது. அதில், கருவேல மரங்கள் ரூ.4.63 லட்சம் மதிப்பில் ஏலத்தில் விட தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

  இதனடிப்படையில், ஏலம் விடுவதற்காக சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் பொட்டிப்புரம் வந்தனர். சில ஒப்பந்ததாரர்களும் அங்கு வந்தனர். ஆனால், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்கள், கருவேல மரங்களையும் ஏலம் விடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஒப்பந்ததாரர்கள் திரும்பிச் சென்றனர்.

  இது குறித்து, சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார் கூறுகையில், வனத் துறையினர் பரிந்துரைப்படி, ரூ. 4.63 லட்சத்துக்கு மரங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. மரங்களின் ஏல மதிப்பு குறைக்கப்பட்டால், ஏலம் விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று, ஏலத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai