சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக இருவர் கைது

    By பெரியகுளம்  |   Published on : 09th April 2015 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக, இருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.

      பெரியகுளம் அருகே உள்ள அம்புருவி வனப் பகுதியில் காட்டுப் பன்றிகள் வேட்டையாடப்படுவதாக, வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தேவதானப்பட்டி வனச் சரகர் பி. கருப்பையா தலைமையில், வனவர்கள் எஸ். சுருளிராஜ், ஆர். பழனிச்சாமி, வனக் காப்பாளர்கள் மூக்கையா, மாரிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

      அப்போது, அம்புருவி வனப் பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் காவலாளிகளாக பணியாற்றி வரும், பெரியகுளம் நகர வடகரையைச் சேர்ந்த ரவி (46), தென்கரையைச் சேர்ந்த மணிகண்டன் (36) ஆகிய இருவரும் காட்டுப் பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சியைக் கொண்டு சென்றது தெரியவந்தது.   இவர்களைப் பிடித்த வனத் துறையினர், வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai