சுடச்சுட

    

    பெரியகுளம் பாதாள சாக்கடை நிதி விவகாரம்: நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

    By மதுரை  |   Published on : 09th April 2015 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் பாதாள சாக்கடைத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

       தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதியில் கழிவு நீர் கலப்பதால் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை விரைவு படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.   இம்மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது பாதாள சாக்கடை பணிக்கான ரூ.30 கோடி என்ன ஆனது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இம்மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, நகராட்சி ஆணையர் மாணிக்க அரசி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு ரூ.26.60 கோடியும், பராமரிப்பு பணிகளுக்காக ரூ.66 லட்சமும் வழங்க நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழகம் 2014 ஜன.27இல் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து குடிநீர்வடிகால் வாரியம் சார்பில் அடுத்தடுத்து 3 முறை டெண்டர் கோரிய போதும் யாரும் எடுக்க வரவில்லை. கடந்த ஜன.1 ஆம் தேதி மீண்டும் டெண்டர் கோரிய போது ஒருவர் டெண்டர் அளித்தார். இதை குடிநீர் வடிகால் வாரியம் இறுதி செய்ய உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

     இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான ரூ.26.60 கோடி நிதி எந்த கணக்கின் கீழ் அனுமதிக்கப்பட்டு உள்ளது எனற விவரத்தை நேரில் ஆஜராகி தெரிவிக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த திட்டம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டனர். ஏப்.20க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai