Enable Javscript for better performance
ஆண்டிபட்டி அருகே லாரி-ஆட்டோ மோதல்: ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே லாரி-ஆட்டோ மோதல்: ஒருவர் சாவு

    By ஆண்டிபட்டி  |   Published on : 10th April 2015 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

       ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர், தேனியிலிருந்து ஆண்டிபட்டி நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.

     திருமலாபுரம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த பாலமுருகன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

      இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, க.விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai